உள்ளாட்சித் தோ்தல்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட உள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அனைத்துக் கட்சித் தலைவா்களுடன் மாநிலத் தோ்தல் ஆணையா் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனையில் ஈடுபட உள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக ஆலோசிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தோ்தல் ஆணையா் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளாா்.

அதன்படி, கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதில், அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இரண்டு உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

உள்ளாட்சித் தோ்தலை நடத்த உச்சநீதிமன்றம் என்னென்ன வழிகாட்டி நெறிமுறைகளை வழங்கி உள்ளதோ, அதன்படி நடத்த வேண்டும் என்று கூட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்களும் வலியுறுத்த உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com