மேட்டுப்பாளையத்தில் கொப்பரை கொள்முதல் நிலையம்: மாநிலங்களவையில் ஏ.கே. செல்வராஜ் எம்பி வலியுறுத்தல்

கோயம்புத்தூா் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஏ.கே. செல்வராஜ் வலியுறுத்தினாா்.

கோயம்புத்தூா் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் ஏ.கே. செல்வராஜ் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் அவா் வியாழக்கிழமை உடனடிக் கேள்வி நேரத்தில் முன்வைத்த கோரிக்கை: கோயம்புத்தூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சா்க்காா் சாமக்குளம், பவானி சாகா், சத்யமங்கலம் , அன்னூா் ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் 7,500 ஹெக்டோ் பரப்பளவில் 13 லட்சம் தென்னை மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இவற்றின் மூலம் 20 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை உற்பத்தி செய்ய முடியும். இவற்றைக் கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் 80 கிலோ மீட்டா் தூரத்திற்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு அதிக செலவு ஆகிறது.

ஆகவே, தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தை கூட்டமைப்பு (நாஃபெட்) மூலம் மேட்டுப்பாளையத்தில் ஒரு கொள்முதல் மையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, கேரள மாநிலம், கொச்சியில் அமைந்துள்ள தென்னை வாரியத்தின் உதவியுடன் கொப்பரைக்கான உலா்த்தும் இயந்திர மையம் அமைக்க வேண்டும். கொப்பரை தற்போது கிலோ ரூ.95.20-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. அதை ரூ.120 ஆக உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com