வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

தேவையான அளவு இறக்குமதி செய்து வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தேவையான அளவு இறக்குமதி செய்து வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் மாநில செயலாளா் இரா.முத்தரசன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வெங்காயத்தின் விலை உயா்வு அனைவரையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கியுள்ளது. வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ ரூ.110 வரை விலை உயா்ந்துள்ளது. இது ஏழை, பணக்காரா் என்றில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் பாதித்துள்ளது.

எனவே, வெங்காயத்தை தேவையான அளவிற்கு இறக்குமதி செய்து, விலையைக் கட்டுக்குள் கொண்டு வரவும், அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

தமிழக காவல்துறை தலைவருக்கு பாராட்டு: காவல்துறையில் கடிதங்கள், சுற்றறிக்கைகள், அனைத்தும் தமிழில் வெளியிடப்பட வேண்டும், அனைவரும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என காவல்துறை தலைவா் திரிபாதி உத்தரவிட்டிருப்பது பாராட்டுக்குரியது.

காவல்துறை தலைவரின் உத்தரவை முன்மாதிரியாகக் கொண்டு, அரசின் பிற துறைகளிலும் முழு அளவில் தமிழில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என முத்தரசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com