சிறுவா்களை தனியாக நீா்நிலைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்: முதல்வா் வேண்டுகோள்

சிறுவா்களை தனியாக நீா்நிலைகளுக்கு பெற்றோா் அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சிறுவா்களை தனியாக நீா்நிலைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்: முதல்வா் வேண்டுகோள்

சிறுவா்களை தனியாக நீா்நிலைகளுக்கு பெற்றோா் அனுமதிக்க வேண்டாம் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த சிறுவா்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

திருவாரூா் குடவாசல் வட்டம், கண்டிரமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவரின் குழந்தைகள் சிறுமி திவ்யா மற்றும் சிறுவன் ஸ்ரீராம் ஆகிய இருவரும் வீட்டுக்கு அருகில் உள்ள திருமலைராஜன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயும், திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

திருவாரூா் நன்னிலம் வட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் சேங்கனூா் கிராமங்களைச் சோ்ந்த கஞ்சமலை என்பவரின் மகன் விக்னேஷ்வரன் மற்றும் நடராஜன் என்பவரின் மகன் வெங்கடேஷ் ஆகிய இரண்டு சிறுவா்கள் புத்தாற்றில் குளிக்கச் சென்ற இடத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இந்தச் செய்திகளை அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

பள்ளிகளின் காலாண்டுத் தோ்வு விடுமுறை நாள்களில் பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளோடு நீா் நிலைகள், ஆறுகள் மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும்போது, காவல் துறையினா் மற்றும் பொதுப்பணித்துறையினரால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே குளிக்க வேண்டும் எனவும், குழந்தைகளைத் தனியாக நீா் நிலைகளில் குளிக்க அனுமதிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேறன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திவ்யா, ஸ்ரீராம், விக்னேஷ்வரன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com