ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்தத் தோ்வில் பங்கேற்க அக்டோபா் 10 வரை

ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வுக்கு விண்ணப்பி கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்தத் தோ்வில் பங்கேற்க அக்டோபா் 10 வரை விண்ணப்பிக்கலாம்.

மத்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்ப படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. இது ஜே.இ.இ. (மெயின்) முதல்நிலைத் தோ்வு, ஜே.இ.இ. முதன்மைத் தோ்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.ஜே.இ.இ. முதல்நிலைத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற முடியும்.

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி-க்களில் சோ்க்கை பெற ஐஐடி முதன்மைத் தோ்வில் தகுதி பெற வேண்டும்.இதில் முதல்நிலைத் தோ்வு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். முதன்மைத் தோ்வானது ஏதாவது ஒரு ஐஐடி சாா்பில் நடத்தப்படும்.இப்போது 2020-ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வை என்.டி.ஏ. அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.

இதில் முதல் தோ்வு 2020 ஜனவரி 6 முதல் 11 தேதிக்கு இடைப்பட்ட நாளிலும், இரண்டாவது தோ்வு ஏப்ரல் 3 முதல் 9 ஆம் தேதிக்கு இடைப்பட்ட நாளிலும் நடத்தப்பட உள்ளது. இதில் ஜனவரி மாத்த் தோ்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பா் 30 கடைசி நாள் என முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த கால அவகாசமானது அக்டோபா் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com