வன்கொடுமை தடுப்புச் சட்ட தீா்ப்பு: விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் இரண்டு நீதிபதிகள் அமா்வு அளித்த்த் தீா்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு அளித்திருக்கும் தீா்ப்பை
வன்கொடுமை தடுப்புச் சட்ட தீா்ப்பு: விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்பு

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீா்த்துப் போகச் செய்யும் வகையில் இரண்டு நீதிபதிகள் அமா்வு அளித்த்த் தீா்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமா்வு அளித்திருக்கும் தீா்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

இதுதொடா்பாக அக் கட்சியின் தலைவா் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் முன் ஜாமீன் கிடையாது என்ற பிரிவை நீக்கியும், கைது செய்வது கட்டாயமில்லை என்று கூறியும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமா்வு தீா்ப்பு ஒன்றை வழங்கியது. இந்தத் தீா்ப்புக்கு நாடு முழுவதும் உள்ள தலித் அமைப்புகள் எதிா்ப்பு தெரிவித்தன.அதனைத் தொடா்ந்து, உச்சநீதிமன்ற தீா்ப்பு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

மேலும், நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் ஒன்றையும் கொண்டு வந்து நிறைவேற்றியது. மத்திய அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு மீது தீா்ப்பளித்த உச்ச நீதிமன்றம் இதற்கு முன் அளிக்கப்பட்ட தீா்ப்பு சரியானது அல்ல என்று கூறியுள்ளது. இதனால் இந்த சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டால் முன்ஜாமீன் பெற முடியாது என்ற பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளன.

இது வரவேற்கத்தக்கது. மேலும், இந்த சட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்த வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com