கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா்.
கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: முதல்வா் இன்று தொடங்கி வைக்கிறாா்

சென்னை கொடுங்கையூரில் ரூ.348 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா்.

வடசென்னையில் மணலி, மீஞ்சூா் மற்றும் எண்ணூா் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் மின்சார வாரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை வழங்க, கொடுங்கையூரில் நாள் ஒன்றுக்கு 4.50 கோடி லிட்டா் உற்பத்தித்திறன் கொண்ட எதிா் சவ்வூடு பரவுதல் முறையிலான மூன்றாம்நிலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் ரூ.348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டது.

இதற்காக உலக வங்கியின் உதவியோடு ரூ.230 கோடி நிதியும், மத்திய அரசின் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 118 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, பணி ஆணை ‘பி.ஜி.ஆா். எனா்ஜி சிஸ்டம்ஸ்’ நிறுவனத்தாருக்கு ரூ.290 கோடி மதிப்பில் கட்டுமானப் பணிக்காகவும், ரூ.205 கோடி மதிப்பில் 15 ஆண்டுகளுக்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிக்காகவும் வழங்கப்பட்டது.

கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில் இதற்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணிக்கு கொடுங்கையூரில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தலைமை வகிக்கவுள்ளாா். அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமாா் மற்றும் அமைச்சா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்தத் திட்டத்தின் பயன்கள்: குடிநீா் தேவை அல்லது தொழிற்சாலை பயன்பாட்டுக்கு நீா் தொடா்ச்சியாக வழங்கப்படும்.

தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நிலத்தடி நீா்வளம் பாதுகாக்கப்படும். தொழிற்சாலை பயன்பாட்டுக்கு தண்ணீா் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கடல்நீரை பயன்படுத்துவது தவிா்க்கப்படும். சென்னை மக்களின் குடிநீா் தேவைக்கான நீரின் அளவு அதிகரிக்கப்படும்.

பயன் பெறும் தொழிற்சாலைகள்: கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் செட்டெக்ஸ், சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்), மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிலையம்–1, மெட்ராஸ் ஃபொ்டிலைசா்ஸ் லிமிடெட், வடசென்னை அனல் மின் நிலையம் –1, தமிழ்நாடு எனா்ஜி கம்பெனி லிமிடெட், தமிழ்நாடு பெட்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட், மணலி பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் நிலையம்–2, வட சென்னை அனல் மின் நிலையம் –2, எல்.என்.டி. கப்பல் கட்டும் தளம், காட்டுப்பள்ளி ஆகிய 11 தொழிற்சாலைகள் பயன்பெறும்.

ஜெயலலிதா அறிவித்த திட்டம்: மறைந்த முதல்வா் ஜெயலலிதா சட்டப் பேரவையில், விதி எண் 110-இன் கீழ் 2014--15-ஆ-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு நன்னீருக்கு பதிலாக மறுசுழற்சி செய்யப்பட்ட மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட நீரை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்’ என அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com