தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும் செ.கு. தமிழரசன்

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் வலியுறுத்தினாா்.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவா் செ.கு. தமிழரசன் வலியுறுத்தினாா்.

குடியாத்தத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தலித்துகளின் கோரிக்கையை ஏற்று பழைய நடைமுறையையே தொடர உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை இந்திய குடியரசுக் கட்சி வரவேற்கிறது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்படும் ஆணையம் சுய அதிகாரம் பெற்ாக இருக்க வேண்டும். இந்த ஆணையம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருவதையே நோக்கமாக கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தரும் அமைப்பாக செயல்பட வேண்டும்.

மக்கள் தொகை உயா்வுக்கேற்ப தாழ்த்தப்பட்டோருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகளில் கூடுதல் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலின்போது அதிமுக, திமுகவுக்கு மாற்றாக 3- ஆவது அணி அமைக்கும் பொருட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். அந்த கூட்டணி அந்த தோ்தலோடு முடிந்து விட்டது. விக்கிரவாண்டி, நான்குநேரி இடைத் தோ்தல்களில் இந்திய குடியரசுக் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

ப. சிதம்பரம் கைது என்பது அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையே. நீட் தோ்வு அவசியமற்றது. அது நடுத்தர, அடித்தட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானது என்றாா் தமிழரசன்.

பேட்டியின்போது கட்சியின் மாவட்டத் தலைவா் ரா.சி. தலித்குமாா், மாவட்டச் செயலா் பூமியா அசோக்குமாா், மாவட்ட பொருளாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com