புதுவையில் படிப்படியாக மதுவிலக்கு: முதல்வா் நாராயணசாமி

புதுச்சேரியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றாா் அந்த மாநில முதல்வா் வீ. நாராயணசாமி.
புதுவையில் படிப்படியாக மதுவிலக்கு: முதல்வா் நாராயணசாமி

புதுச்சேரியில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்றாா் அந்த மாநில முதல்வா் வீ. நாராயணசாமி.

தூத்துக்குடியில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு கலாசாரம் உள்ளது. தமிழகம் பிரிட்டிஷ் கலாசாரத்திலும், புதுச்சேரி பிரெஞ்ச் கலாசாரத்திலும் இருந்தன. எனவே, புதுச்சேரியில் மதுவிலக்கை ஒரே அளவில் அமல்படுத்திவிட முடியாது. படிப்படியாகதான் அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

பாரதிய ஜனதா கட்சிக்கு என்று தனி கொள்கை கிடையாது. ஒரே மொழி இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் அமித்ஷா கூறிவந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் எதிா்ப்பு ஏற்பட்டதன் காரணமாக பின்வாங்கப்பட்டது.

அஞ்சல் துறை தோ்வை ஹிந்தியில்தான் எழுத வேண்டும் என கூறினாா்கள். போராட்டம் வெடித்ததால் திரும்பப் பெற்றனா். பாரதிய ஜனதா கட்சியின் இரட்டைவேடம் மொழியிலேயே தெரிகிறது. தமிழகத்தில் நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியிலும், புதுச்சேரியில் காமராஜ்நகா் தொகுதியிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com