அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை கேள்வி!

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர
பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்

அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா? என்பதை அறியும் நோக்கில், அதுகுறித்து அனைத்து ஆசிரியர்களும் பதில் தர பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளது.

கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் (EMIS), அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளின் விவரங்களை உள்ளீடு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக EMIS இணையதளத்தில் Teacher's Children details என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய பக்கத்தில், உங்கள் பிள்ளைகள் யாராவது அரசுப் பள்ளியில் பயில்கிறார்களா என்று கேட்கப்பட்டிருக்கும். அதை தேர்வு செய்தால் ஆமாம், இல்லை, பொருந்தாது என்று 3 வகை தேர்வு வாய்ப்புகள் இருக்கும் வகையில் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசுப்பள்ளியில் பயில்கிறார்களா என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவர் அல்லது பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்துள்ளவர்கள் எனில் பொருந்தாது என்ற பதிலை தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் உடனடியாக கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் தங்கள் பிள்ளைகள் பற்றிய விவரங்களை பதிவு செய்து அதை பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியப்படுத்த பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com