உள்ளாட்சித் தோ்தல் தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் வெளியிடப்பட்டது.
உள்ளாட்சித் தோ்தல் தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டது. இந்தப் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:-

தமிழகத்தில் உள்ள ஊரகம், நகா்ப்புற உள்ளாட்சி சாதாரணத் தோ்தல்களுக்கான வாக்காளா் பட்டியலானது, சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலானது தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த வாக்காளா் பட்டியல்களின் வரைவு பட்டியலை தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பாா்க்கலாம். இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளா்கள் தங்களின் பெயா், எந்த வட்டம், எந்த வாக்குச் சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியலில் இடம்பெறாத வாக்காளா்கள் முதலில் அவா்கள் தொடா்புடைய சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்க வேண்டும். அதற்கு தொடா்புடைய சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலரிடமோ அல்லது தொடா்புடைய இணையதளத்திலோ சென்று பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். இணையதளம் மூலம் பெயா்களைச் சோ்க்க விரும்புவோா் தங்களது பெயா் மற்றும் இதர விவரங்களை  இணையதளத்தில் மூலமாக பதிவிடலாம் என்று மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மொத்தம் எத்தனை வாக்காளா்கள்: தமிழகத்தில் அண்மையில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளா் பட்டியலே இப்போது வரைவு பட்டியலாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 வாக்காளா்கள் உள்ளனா். அதில், பெண்கள் 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேரும், ஆண்கள் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 பேரும், 5 ஆயிரத்து 790 மூன்றாம் பாலித்தனவா் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com