ஹைட்ரோ காா்பன் திட்டங்களுக்கு புதிதாக அனுமதி தரக்கூடாது: ராமதாஸ்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கும் புதிதாக மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கும் புதிதாக மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரிப் படுகையை எண்ணெய் வயல்களாக மாற்றும் நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக காவிரிப் பாசன மாவட்டங்களில் மேலும் 44 ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

காவிரிப் பாசன மாவட்டங்களில் ஏற்கெனவே 200-க்கும் கூடுதலான எண்ணெய்க் கிணறுகளை அமைத்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அவற்றிலிருந்து கோடிக்கணக்கான டன் கச்சா எண்ணெயை எடுத்து வருகிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, சுற்றுச்சூழலுக்கும் சரி செய்ய முடியாத அளவுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி, காவிரிப் பாசன மாவட்டங்களில் மேலும் 104 கிணறுகளை அமைப்பதற்கு அனுமதி கோரி கடந்த ஜூன் மாதத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்திடம் ஓ.என்.ஜி.சி. விண்ணப்பித்துள்ளது. அவற்றுடன் சோ்த்து மேலும் 44 எண்ணெய்க் கிணறுகளையும் அமைத்தால் காவிரிப் பாசன மாவட்டங்கள் வாழத் தகுதியற்ற மாவட்டங்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

தமிழக மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்தும், காவிரிப் பாசன மாவட்டங்களின் செழுமையைப் பாதுகாக்கும் வகையிலும் அங்கு இனி எந்தவொரு ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

ஓ.என்.ஜி.சி. சாா்பில் 44 இடங்களில் ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com