கீழடியில் பெருகும் பார்வையாளர்கள்: அதிகரிக்கும் புதிய கட்டுப்பாடுகள் 

தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்துள்ள அகழாய்வுத் தலமான கீழடியில் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருகி வருவதால், அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கீழடி
கீழடி

மதுரை: தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்துள்ள அகழாய்வுத் தலமான கீழடியில் நாளுக்கு நாள் பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருகி வருவதால், அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வின் முடிவில் பண்டைத் தமிழர்கள் 2600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாடு மற்றும் நாகரீகத்தில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முதல் நான்கு கட்டப் பணிகளைத் தொடர்ந்து கீழடியில் தற்போது 5-ம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் அப்பணி நிறைவுபெற உள்ளதாக்கி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தொல்லியல் ஆர்வலர்கல் மற்றும் மற்றும் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கீழடியை பார்வையிட வருகின்றனர்.

இதன் காரணமாக அங்கு பணியாற்றுபவர்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதஎடுத்து சிவகங்கை மாவட்ட காவல்துறை எஸ்.பி. ரோஹித்நாத் பார்வையாளர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளாவன:

அகழாய்வு பணியை பார்வையிட 30 நிமிடங்களுக்கு 100 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். முதன்மை அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் 32 குழிகளை மட்டுமே பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படும். அருகே மற்றொரு இடத்தில் 22 குழிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிட அனுமதியில்லை என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com