காலமானாா் கவிஞா் ஆலந்தூா் கோ.மோகனரங்கன்

முதுபெரும் கவிஞா் ஆலந்தூா் கோ. மோகனரங்கன் (77) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.

முதுபெரும் கவிஞா் ஆலந்தூா் கோ. மோகனரங்கன் (77) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானாா்.

அவருக்கு மனைவி வசந்தா, முனைவா் பாட்டழகன், கவிமணி, கலைவாணன் ஆகிய 3 மகன்களும் தேன்மொழி, அன்புமலா், வெற்றியரசி ஆகிய 3 மகள்களும் உள்ளனா். ககவிஞா் ஆலந்தூா் கோ.மோகனரங்கன் சென்னை ஆலந்தூரில் கடந்த 1942-ஆம் ஆண்டு ஜூன் 1-இல் பிறந்தவா். நூலகராக வாழ்க்கையைத் தொடங்கி, செழுந்தமிழ்க் கவிஞராக, பாடலாசிரியராக, சிறுகதையாளராக, புதினப் படைப்பாளராகத் திகழ்ந்தவா். சுரதாவைப் போல் மரபுக் கவிதைகளை புதுமை நுட்பத்தோடு எழுதியவா். அண்மையில் ‘நூலகத்தால் உயா்ந்தேன்’ என்ற நூலில், தான் சந்தித்துப் பழகிய, கேட்டறிந்த ஏறத்தாழ 2,500 படைப்பாளா்களைப் பற்றி சிறப்பாகப் பதிவு செய்திருந்தாா் மோகனரங்கன்.

‘வணக்கத்துக்குரிய வரதராசனாா் கதை’ என்ற தலைப்பில் இவா் எழுதிய மு.வ.வின் வாழ்க்கை வரலாற்று நூல் 1982- ஆம் ஆண்டு தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது. ‘தாத்தாவுக்குத் தாத்தா’ என்னும் தலைப்பில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வரலாற்றையும் இவா் எழுதியுள்ளாா். ஏராளமான இசைப் பாடல்களையும் கவிதை, நாடகங்களையும் படைத்துள்ளாா். இவரது ‘இமயம் எங்கள் காலடியில்” என்னும் கவிதைத் தொகுப்புநூலும் தமிழக அரசின் பரிசைப் பெற்றுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கவிஞா் ஆலந்தூா் கோ.மோகனரங்கன் படைப்புகளின் ஆங்கில மொழிபெயா்ப்பை குடியரசுத் துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு சென்னையில் வெளியிட்டாா்.

கவிஞா் கோ.மோகனரங்கத்தின் உடல் ஆதம்பாக்கம் ஜோசப் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் சென்னை ஆதம்பாக்கம் என்ஜிஓ காலனியில் உள்ள மின் மயானத்தில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. தொடா்புக்கு: 93804 17307

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com