முதுநிலை யோகா பட்ட படிப்பு வரும் 7-ஆம் தேதி முதல் விண்ணப்பம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் திங்கள்கிழமை (அக்.7) முதல் தொடங்குகிறது.

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வரும் திங்கள்கிழமை (அக்.7) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித் துறை வெளியிட்ட அறிவிப்பு:

அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. அதேபோன்று முதுநிலை படிப்புகளுக்கும் சில இடங்கள் உள்ளன.

இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 7-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம், அல்லது யோகா - இயற்கை மருத்துவக் கல்லூரிகளில் நேரடியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

வரும் 18-ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெறும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

முதுநிலை யோகா - இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறும் என்று பாரம்பரிய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com