உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக திட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிடுகிறார் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கூறினார்.
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக திட்டம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிடுகிறார் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கூறினார்.
 தூத்துக்குடியில் அவர் சனிக்கிழமை அளித்த பேட்டி:
 தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சியில் பாஜகவுக்கு என்ன பங்களிப்பு உள்ளது எனத் தெரியவில்லை. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு நகைச்சுவையாக இருக்கிறது. 2016 பேரவைத் தேர்தலில் திமுக 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்து 90 இடங்களைப் பிடித்தது. ஆனால், அதிமுக அரசு யாருடைய ஒத்துழைப்பும், கூட்டணியுமின்றி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது.
 முதல்வர் பதவி ஒன்றுதான் லட்சியம் என்ற கனவோடு ஸ்டாலின் சுற்றிக்கொண்டிருந்தார். அது நனவாகாததால் ஏதேதோ பேசுகிறார். மக்களவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு வேறாக அமைந்தாலும், பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர். அதை ஸ்டாலினால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
 தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கக் கூடாது என அவர் நினைக்கிறார். அதை நிறுத்தத் திட்டமிடுகிறார். அவர் என்னதான் திட்டமிட்டாலும் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி உள்ளாட்சித் தேர்தலை அரசு நடத்தும். அத்தேர்தலில் அதிமுக நூறு சதவீத வெற்றிபெறும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com