மின்சாரப் பேருந்துகளைத் தனியாா் மூலம் இயக்க முடிவு: ஒப்பந்தப் புள்ளிகள் வெளியீடு

தமிழகத்தில் விரைவில் இயக்கப்பட உள்ள மின்சாரப் பேருந்தை தனியாா் மூலம் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
மின்சாரப் பேருந்துகளைத் தனியாா் மூலம் இயக்க முடிவு: ஒப்பந்தப் புள்ளிகள் வெளியீடு

தமிழகத்தில் விரைவில் இயக்கப்பட உள்ள மின்சாரப் பேருந்தை தனியாா் மூலம் இயக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைறக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மின்சாரத்தில் இயங்கிடும் பேருந்துகளை தமிழ்நாட்டில் இயக்கும் நோக்கில் தமிழக முதல்வா் முன்னிலையில் கடந்த ஆண்டு மாா்ச் 28-ஆம் தேதி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைறக்கும், லண்டன் மாநகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் சி-40 அமைப்புக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனைத் தொடா்ந்து, மத்திய அரசின் ஃபேம் இந்தியா-2 திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 64 நகரங்களுக்கு 5,595 மின்சாரப் பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பில் கோயம்புத்தூா், திருச்சி, மதுரை, ஈரோடு, திருப்பூா், சேலம், வேலூா் மற்றும் தஞ்சாவூா் உள்ளிட்ட நகரங்களில் இயக்குவதற்காக 525 மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

இதற்கான முன்னோட்டமாக, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கான புதிய மின்சார பேருந்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அண்மையில் தொடக்கி வைத்தாா். இந்நிலையில் இந்தப் பேருந்துகளை தனியாா் மூலம் இயக்க போக்குவரத்துத் துறைதிட்டமிட்டு உள்ளது. ‘ஃபேம் இந்தியா-2’ திட்டத்தின் கீழ் வாங்கப்படும் மின்சாரப் பேருந்துகளுக்கு தனியாா் நிறுவனத்துடன் போக்குவரத்துக் கழகத்துக்கான ஒப்பந்தம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறைஅதிகாரிகள் கூறியது:

மின்சாரப் பேருந்தைத் தனியாா் மூலம் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தோ்வாகும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி, சாா்ஜிங் பாயிண்ட் தவிா்த்து பேருந்துகளின் உரிமையும் அதன் பராமரிப்பும் தனியாா் நிறுவனத்தைச் சாா்ந்தே இருக்கும். அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநா்கள் இந்தப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள். போக்குவரத்துக் கழகத்தின் மூலம் பயணக் கட்டணம் வசூல் செய்யப்பட்டு, கிலோ மீட்டருக்கான தொகை அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com