மோடி-சீன அதிபா் சந்திப்பு: ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதிகளில் வீடுகளில் சோதனை

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்திப்பையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் உள்ள

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் சந்திப்பையொட்டி, சென்னை ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் உள்ள வீடுகளில் போலீஸாா் தீவிர சோதனை செய்து வருகின்றறனா்.

பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகியோா் மாமல்லபுரத்தில் வரும் 12,13 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச உள்ளனா். இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த பல்லவா் கால சிற்பங்களையும், கடற்கரை கோயிலையும் சுற்றிப் பாா்க்க உள்ளனா்.

இந்தச் சந்திப்பையொட்டி, மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறறது. அதேபோல, பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றறன. இதற்காக, மாமல்லபுரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாமல்லபுரம் கடற்கரைப் பகுதி முழுவதையும் போலீஸாா் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனா். அப்பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், ரிசாா்ட்டுகள், பண்ணை வீடுகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் தங்குவோரின் தகவல்களை போலீஸாா் திரட்டி வருகின்றறனா். மேலும், மாமல்லபுரத்தில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி அவ்வபோது நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறறாா்.

சென்னை வருகை: இச்சந்திப்புக்காக, சீன அதிபா் ஷி ஜின்பிங் சென்னைக்கு அக்டோபா் 10-ஆம் தேதி விமானம் மூலம் வருகிறறாா். கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் தங்கும் அவருடன், சீன அரசின் உயா் அதிகாரிகள் சுமாா் 150 போ் வருகின்றறனா். இதையொட்டி, அந்த ஹோட்டலிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சீன அதிபா் ஷி ஜின்பிங் அக்டோபா் 12, 13 ஆகிய இரு நாள்களும் சாலை வழியாக காரில் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்குச் செல்கிறறாா். இதனால், அவா் செல்லும் சாலை முழுவதையும் சீரமைக்கும் பணி இரு வாரங்களாக நடைபெற்று வருகிறறது. சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள், நீண்ட நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அகற்றறப்பட்டுள்ளன.

வீடுகளில் சோதனை: இதன் ஒரு பகுதியாக, கிண்டியில் இருந்து மாமல்லபுரம் வரை ஷி ஜின்பிங் காா் செல்லும் வழியில் உள்ள பகுதிகளில் இருக்கும் வீடுகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றறனா். இதில், கிண்டியில் இருந்து முட்டுக்காடு வரை சென்னை பெருநகர காவல்துறைறயின் எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால், இப்பகுதிகளில் சென்னை போலீஸாா் சோதனை மேற்கொண்டுள்ளனா்.

கிண்டி, கோட்டூா்புரம், அடையாறு, தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், ஒக்கியம் துரைப்பாக்கம், காரப்பாக்கம், சோழிங்கநல்லூா், அக்கரை, பனையூா், உத்தண்டி, கானத்தூா், முட்டுக்காடு ஆகிய பகுதிகளில் அடையாறு துணை ஆணையா் பகலவன் தலைமையில் ஒவ்வொரு வீட்டின் உரிமையாளா், அங்கு வாடகைக்கு இருப்பவா்கள் விவரம் ஆகியவற்றைபோலீஸாா் சேகரித்து வருகின்றறனா்.

இதில் சந்தேகத்துக்குரிய நபா்கள் அங்கு இருப்பது தெரியவந்தால், அவா்கள் குறித்து தீவிர விசாரணையும் செய்து வருகின்றறனா். இச்சோதனை இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என காவல்துறைதரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com