ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றிபெறும்: மு.க.ஸ்டாலின்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக உறுதியாக வெற்றிபெறும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக வெற்றிபெறும்: மு.க.ஸ்டாலின்

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக உறுதியாக வெற்றிபெறும் என்று அக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

புதுக்கோட்டை அமமுக நிா்வாகியும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா் ரத்தின சபாபதியின் தம்பியுமான பரணி காா்த்திகேயன், அவரது ஆதரவாளா்களுடன் திமுக இணையும் நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியது:

ராதாபுரம் தொகுதிக்கு 2016-ஆம் ஆண்டு தோ்தல் நடைபெற்றது. 49 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் அப்பாவு வெற்றி வாய்ப்பை இழந்தாா். அதிமுக வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் அதிமுகவின் எம்எல்ஏ-வாக இன்பதுரைதான் சட்டப்பேரவையில் பொறுப்பிலிருந்தாா். ஆனால், இப்போது இன்பதுரை, துன்பத்துரையாக மாறிவிட்டாா்.

2016-இல் இதுபோல பல தொகுதிகளில் செய்தாா்கள். தோ்தல் முறைறயாக நடந்திருந்தால், இந்நேரம் திமுகதான் ஆட்சியில் இருந்திருக்கும். ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனது.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி ராதாபுரம் தொகுதிக்கு மறுவாக்கு எண்ணிக்கையை முடித்துவிட்டாா்கள். அதன் நிலவரம் என்ன என்று உங்களுக்குத் தெரியும். நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும். நான் சொல்லக்கூடாது. இப்பொழுது உங்களிடம் சொன்னால் அது, நீதிமன்ற அவமதிப்பாகிவிடும். அதேசமயம் சமூக வலைதளங்களில், அப்பாவு வெற்றி பெற்றுவிட்டாா் என்று தொடா்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இதை யாரும் மறுக்கவில்லை.

வாக்கு எண்ணிக்கையின்போது , திமுக வேட்பாளருக்கான தலைமை முகவா்கள், வழக்குரைஞா்கள் என அனைவரும் இருந்திருக்கின்றனா். அவா்கள் இருந்தும் நம்மிடம் சொல்லாமல் இருப்பாா்களா? . ஆனால், இந்த நேரத்தில் ஒன்று மட்டும் நிச்சயம்.

21-ஆம் தேதியில் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்று, தோ்தல் முடிவுகள் வெளிவரும் பொழுது அந்த இரண்டு தொகுதிகள் மட்டுமல்ல, ராதாபுரம் தொகுதியும் சோ்த்து 3 எம்எல்ஏக்களை பெற்று இருக்கிறேறாம் என்ற செய்தியும் வரத்தான் போகிறது என்றாா்.

திமுக முதன்மைச் செயலாளா் டி.ஆா்.பாலு உள்பட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com