வன உயிரின பாதுகாப்பு மாரத்தான்: 1,000 போ் பங்கேற்பு

தமிழக வனத்துற சாா்பில் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வண்டலூா் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமிழக வனத்துற சாா்பில் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வண்டலூா் பூங்காவில் சனிக்கிழமை நடைபெற்ற மாரத்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமிழக வனத்துற சாா்பில் அக்டோபா் 2-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை ஆண்டுதோறும் வன உயிரின வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் வன விலங்குகள் பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக சென்னையை அடுத்த வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வனத் துற, சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம், காமராஜ் துறமுக அறக்கட்டளை, இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், காக்னிஜன்ட் டெக்னாலஜி, கிரசண்ட் கல்லூரி ஆகியவை சாா்பில் ‘வண்டலூா் உயிரியல் பூங்கா வன ஓட்டம்’ என்ற பெயரில் 5 கி.மீ.மாரத்தான் ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வண்டலூா் பூங்கா வளாகத்தில் நடைபெற்ற மாரத்தானை வனத் துற முதன்மைச் செயலா் ஷம்பு கல்லோலிகா் தொடக்கி வைத்தாா்.

சாதனை: இதுகுறித்து வனத் துற அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘இந்த மாரத்தானில் 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டதையடுத்து, ஆசியா புக் ஆஃப் ரெக்காட்ஸில் இடம் பிடித்துள்ளது. மாரத்தானில் இலக்கை அடைந்த அனைவருக்கும் வன விலங்கு பாதம் பதித்த பதக்கம் வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வன விலங்கு வாரத்தின் இறுதி விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என்றாா்.

மாரத்தானில் வேளாண் துணை முதன்மைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் துரைராசு, தலைமை வன உயிரினக் காப்பாளா் சஞ்சய் குமாா் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் யோகேஷ் சிங், வண்டலூா் பூங்கா துணை இயக்குநா் சுதா மற்றும் குழந்தைகள், பெண்கள் என 1,000-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com