இதய சிகிச்சையில் கதிர்வீச்சு தொழில்நுட்பம்: சென்னையில் சர்வதேச மாநாடு

கதிர்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடர்பான சர்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுவிட்ஸர்லாந்து


கதிர்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடர்பான சர்வதேச மாநாடு அண்மையில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சுவிட்ஸர்லாந்து, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மியாட் மருத்துவமனை மற்றும் இந்திய நியூக்ளியர் இதய சிகிச்சை நிபுணர்கள் அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 
கூறியதாவது:
 பொதுவாக, புற்றுநோய்க்கான கதிரியக்க சிகிச்சைகள் தொடர்பான கருத்தரங்குகள் பரவலாக நடைபெறுவது உண்டு. 
அதேவேளையில், இதய சிகிச்சைகளுக்கான கதிர்வீச்சு தொழில்நுட்பங்கள் குறித்தும், அதுதொடர்பான மருத்துவ முறைகளை பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது குறித்தும் பிரத்யேக கருத்தரங்குகள் நடைபெறுவது மிக அரிதாகவே உள்ளது. 
அதைக் கருத்தில் கொண்டே கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கதிர்வீச்சு தொழில்நுட்ப இதய சிகிச்சை மாநாட்டை நாங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.
நிகழாண்டு நடைபெற்ற மாநாட்டில் இதய நல மருத்துவர்கள் மட்டுமன்றி பொது மருத்துவர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், ஆய்வகத் தொழில்நுட்பனர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற சிறப்பு அமர்வுகளில் சர்வதேச இதய சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று உரையாற்றினர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மாநாட்டில், மியாட் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பி.வி.ஏ.மோகன்தாஸ், தலைவர் மல்லிகா மோகன்தாஸ், மேலாண் இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com