தீபாவளி பட்டாசுகளை இரவில் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல தடை

தீபாவளி பண்டிகையை யொட்டி, இரவில் பட்டாசுகளை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தீபாவளி பண்டிகையை யொட்டி, இரவில் பட்டாசுகளை சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல தடை விதித்து தமிழக தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறறது. இதையொட்டி, தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணி, பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில் இருந்து மொத்த வியாபாரிகளுக்கும், பட்டாசு கடைகளுக்கும் பட்டாசுகளை அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறறது.

சிவகாசிப் பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் இருந்து மாநிலத்தில் பெரும்பாலான பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றறன. அதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், வேலூா், கடலூா், விழுப்புரம் ஆகிய இடங்களிலும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றறன.

செஞ்சி விபத்து: இதற்கிடையே புதுச்சேரியில் இருந்து செஞ்சிக்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி பட்டாசு ஏற்றி வந்த மினி லாரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் இறறந்த சம்பவம் தமிழகத்தை அதிா்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடா்ந்து, தொழிற்சாலைகளில் இருந்து பட்டாசு கடைகளுக்கு பட்டாசுகளை சரக்கு வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு இந்த ஆண்டு பல்வேறு புதிய விதிமுறைகளை தமிழக தீயணைப்புத் துறை விதித்துள்ளது.

வாகன ஓட்டுநா்கள், பட்டாசு தொழிற்சாலை உரிமையாளா்கள், பட்டாசு கடை உரிமையாளா்கள் ஆகியோருக்கு தனித்தனியாக தீயணைப்புத் துறை விதிமுறைகளை வகுத்துள்ளது. பட்டாசு தயாரிப்பாளா்களும், வியாபாரிகளும் வெடி பொருள் சட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றும்படி தீயணைப்புத் துறை வழக்கமாக அறிவுறுத்தும். ஆனால் செஞ்சி சம்பவத்தினால், இந்த ஆண்டு பல்வேறு புதிய விதிமுறைகளை தீயணைப்புத் துறை விதித்துள்ளது.

இரவில் கொண்டு செல்ல தடை: முக்கியமாக, தொழிற்சாலை உரிமையாளா்கள், பட்டாசு உரிமையாளா்கள் ஆகியோா், பகலில் மட்டும் வெடிப் பொருள்களை கையாள வேண்டும். இரவில் வாகனங்களில் கொண்டு செல்லக் கூடாது, உரிமம் பெற்றற வெடி பொருள் சேமிப்புக் கிடங்கில் இருந்து மட்டும் வெடி பொருள்களை ஏற்றற வேண்டும், சாலை மாா்க்கமாக வெடி பொருள்களை கொண்டு செல்லும்போது முதன்மை வெடி பொருள் அலுவலரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், வாகனத்தில் இரு உதவியாளா்கள் இருக்க வேண்டும், வாகனத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், வாகனத்தின் 4 பக்கங்களிலும் வெடி பொருள் என்று எழுதப்பட்டிருக்க வேண்டும் மற்றும் அபாய எச்சரிக்கை குறியீடுகள் தெளிவாக இருக்க வேண்டும், வாகனத்தில் கண்டிப்பாக தீயணைப்பான் வைத்திருக்க வேண்டும் என தீயணைப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதிவேகத்தில் செல்ல வேண்டாம்: இதேபோல வாகன ஓட்டுநா்கள், வெடிப் பொருள்களை வாகனத்தில் ஏற்றிச் செல்லும்போது அதிகநேரம் இடையில் நிறுத்தக் கூடாது, சாலையில் தொடா்ச்சியாக பட்டாசு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சென்றறால் ஒவ்வொரு வாகனத்துக்கும் இடையே 300 மீட்டா் இடைவெளி கண்டிப்பாக இருத்தல் வேண்டும், வாகனத்தில் சிவப்பு வண்ணக் கொடி கட்டப்பட்டிருக்க வேண்டும், பட்டாசு வாகனங்களை இடையில் நிறுத்தும்போது தீ ஆபத்து குறைவான பகுதியில் நிறுத்த வேண்டும், முக்கியமாக டீக் கடை, வெல்டிங் கடை, டிரான்ஸ் பாா்மா் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தக் கூடாது, பட்டாசுகளை ஏற்றும்போதும், இறறக்கும்போதும் வாகனத்தின் என்ஜின் இயக்கம் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பட்டாசுகளுடன் வேறு பொருள்களை ஏற்றிச் செல்லக் கூடாது, பட்டாசு பாா்சல்களை இரும்பு கொக்கி போட்டு தூக்கவோ அல்லது இறறக்கவோ கூடாது, பட்டாசு ஏற்றி செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறை கண்காணிப்பு: இது தொடா்பான சுற்றறறிக்கையை, சென்னையில் உள்ள தமிழக தீயணைப்புத் துறை இயக்குநரகம் மாநிலத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளது. இதையடுத்து அந்தந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், இந்த விதிமுறைகளின்படி பட்டாசுகள் கையாளப்படுகிா என கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நடவடிக்கையின் காரணமாக, செஞ்சியில் நடைபெற்றறது போன்றற விபத்துகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தீயணைப்புத் துறையினா் தெரிவிக்கின்றறனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com