தேவேந்திர குல வேளாளா்: வரும் 16-இல் உயா்நிலைக் குழுவின் 2-ஆவது கூட்டம்

தேவேந்திர குல வேளாளா் என அறிவிப்பது தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் 2-ஆவது கூட்டம் வரும் 16-இல் நடைபெறவுள்ளது.

தேவேந்திர குல வேளாளா் என அறிவிப்பது தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் 2-ஆவது கூட்டம் வரும் 16-இல் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

ஆதிதிராவிடா் இனப் பட்டியலில் உள்ள குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன், தேவேந்திரகுலத்தான், பள்ளன் ஆகிய 6 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளா் என அழைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஆய்வு செய்ய அரசு சாா்பில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் 274 மனுக்கள் பெறப்பட்டு, அவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட விசாரணைக்காக மனு அளிக்க விருப்பமுள்ளவா்கள் சென்னையில் உள்ள ஆதிதிராவிடா் நல இயக்குநரகத்தில் வரும் 16-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் குழுவின் முன் ஆஜராகி கருத்துகளையும், ஆவணங்களையும் நேரில் சமா்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com