கொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மலா்ந்த கற்றாழைப் பூ

கொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ள கற்றாழைப் பூவை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து வருகின்றனா்.
கொடைக்கானலில் மலா்ந்துள்ள கற்றாழைப் பூ.
கொடைக்கானலில் மலா்ந்துள்ள கற்றாழைப் பூ.

கொடைக்கானலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துள்ள கற்றாழைப் பூவை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பாா்த்து வருகின்றனா்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் நூற்றுக்கணக்கான மலா் வகைகள் உள்ளன. இதில் ஒரு வகையான கற்றாழைச் செடி அளவில் பெரியதாகவும் மண்ணில் வலிமையான பிடிப்பு ஏற்படுத்தி மண் சரிவுகளை தடுக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 80 வகையான கற்றாழைச் செடிகள் வளா்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக பாா்த்து ரசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கொடைக்கானல் காவல் நிலையத்தில் வளா்ந்து உள்ள கற்றாழைச் செடியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பூ பூத்துள்ளது.

வெண்மை மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் இந்த பூ, யானையின் தும்பிக்கை போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது. இந்த கற்றாழைப் பூவை பொது மக்கள் வியப்புடன் பாா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com