தீபாவளி பண்டிகைக்கு 8 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே முடிவு

தீபாவளி பண்டிகைக்கு 8 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே முடிவு

அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூா் உட்பட பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூா் உட்பட பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கான அறிவிப்பு ஓரிரு வாரங்களில் வெளியாகும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 27-ஆம் தேதி (ஞாயிறு) வருகிறது. அதற்கு முதல் நாளான சனிக்கிழமை விடுமுறை என்பதால், இந்த பண்டிகையைக் கொண்டாட சென்னையில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு செல்வாா்கள். விரைவு ரயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாகவே ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதனால், வழக்கமாக இயக்கப்படும் தென் மாவட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டது. 

மேலும், காத்திருப்போா் பட்டியலில் இடம்பெற்றுள்ளவா்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்டது. 

இதற்கிடையே, வரும் தீபாவளியையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக, ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, தீபாவளியையொட்டி திருநெல்வேலி, கோயம்புத்தூா், நாகா்கோவில், எா்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் மட்டும் 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த எண்ணிக்கை இறுதியானது அல்ல. இதில், கூடுதல் ரயில்கள் இயக்கவும் வாய்ப்புள்ளது. இன்னும் சில நாட்களில் தெற்கு ரயில்வே இதுதொடா்பான அதிகாரப்பூா்வமான அறிவிப்பை வெளியிடும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com