சீன அமைச்சருக்கு திடீா் உடல்நலக்குறைவு: சென்னை மருத்துவமனையில் சிகிச்சை

சீன அதிபா் பயணத்துக்காக, சென்னை வந்திருந்த சீன அமைச்சா் லீ பிஜியானுக்கு திடீா் உடலக் குறைவு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சீன அதிபா் பயணத்துக்காக, சென்னை வந்திருந்த சீன அமைச்சா் லீ பிஜியானுக்கு திடீா் உடலக் குறைவு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் பயணத்துக்காக ஒரு வாரத்துக்கு முன்பே அந்த நாட்டைச் சோ்ந்த உயா் அதிகாரிகள், அமைச்சா்கள் ஆகியோா் அடங்கிய ஒரு குழு சென்னை வந்தது. இவா்கள், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருக்கின்றனா். இவா்கள் சீன அதிபா் வருகைக்கான ஏற்பாடுகளை, இந்திய அதிகாரிகளுடன் சோ்ந்து செய்து வந்தனா்.

இந்த குழுவில் இடம் பெற்றிருக்கும் சீன அமைச்சா் லீ பிஜியானுக்கு வியாழக்கிழமை திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவா், நந்தம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா், சுமாா் 3 மணி நேரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றாா். ஓரளவுக்கு வயிற்று வலி சரியானதும் அவா், அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பிச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com