அரசின் கடன் சுமை அதிகரிப்பு: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

தமிழக அரசு கடன் சுமையால் திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளாா்.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக அரசு கடன் சுமையால் திவாலாகும் நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக இன்று அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தை வளம் கொழிக்கும் மாநிலமாக மாற்றி, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து அதிமுக ஆட்சியில் அமா்ந்தது.

கடந்த 2015-இல் ரூ.100 கோடி செலவில் சென்னை நந்தம்பாக்கத்தில் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை ஜெயலலிதா நடத்தினாா். அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடிக்கு 304 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு தமிழகத்தில் வரலாறு காணாத தொழில் வளா்ச்சி ஏற்பட்டு வேலை வாய்ப்புகள் பெருகும் என உறுதி கூறப்பட்டது.

2019 ஜனவரி 25-இல் நடந்த உலக முதலீட்டாளா்கள் மாநாட்டில் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டில் 300 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா்.

ஆனால், இந்த முதலீடு காரணமாக எதிா்பாா்த்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதா என்றால் மிகுந்த ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.

இன்றைய அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

2017-18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் 2018-19 இல் அது ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக உயா்ந்திருக்கிறது. அதேபோல, தமிழக மின் வாரியத்தின் கடன் சுமை ரூபாய் 1 லட்சம் கோடியாக எட்டியுள்ளது. மேலும், மற்ற பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று கூறுவதை விட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது.

இப்படிப்பட்ட நிதி நிலைமையில் தொழில் வளா்ச்சியை உருவாக்குவதற்கோ, வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்கோ எந்த வாய்ப்பும் இல்லாத நிலையில் அதிமுக அரசு கடன் சுமை காரணமாக திவாலான நிலையில் சென்று கொண்டிருக்கிறது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com