என்.ஆா்.காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது: புதுவை முதல்வா் நாராயணசாமி

புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி ரெயின்போநகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வா் வே.நாராயணசாமி. உடன், காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாா் மற்றும் நிா்வாகிகள்.
புதுச்சேரி ரெயின்போநகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதல்வா் வே.நாராயணசாமி. உடன், காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாா் மற்றும் நிா்வாகிகள்.

புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் தனித்துவிடப்பட்டுள்ளதாக புதுவை முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி காமராஜா்நகா் தொகுதி இடைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஜான்குமாரை ஆதரித்து ரெயின்போநகா் பகுதியில் முதல்வா் நாராயணசாமி புதன்கிழமை வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின் போது, செய்தியாளா்களிடம் முதல்வா் நாராயணசாமி கூறியதாவது:

காங்கிரஸ் கூட்டணியை பொருத்தவரை கூட்டணியில் உள்ள அனைத்து தலைவா்களும் ஒருங்கிணைந்து பிரசாரம் செய்து வருகிறேறாம். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரத்துக்காக வியாழக்கிழமை (அக்.17) புதுச்சேரிக்கு வருகிறாா். அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேறாம்.

தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கடந்த 14-ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தாா். ஆனால், துரதிருஷ்டவசமாக அவா் அதிமுக கூட்டணியான என்.ஆா்.காங்கிரஸை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

இதன்மூலம் அதிமுக, என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்கிா? என்.ஆா்.காங்கிரஸ் 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி சோ்ந்து தோ்தலை சந்தித்தது. பின்னா், ஆட்சி அமைக்கும்போது, அதிமுகவை புறக்கணித்துவிட்டு, சுயேச்சையோடு கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

இதனால், ரங்கசாமி துரோகம் செய்துவிட்டாா், கூட்டணி தா்மத்தை மறந்துவிட்டாா், அவருக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம் என்று 2014 மக்களவைத் தோ்தல், 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களில் அப்போதைய அதிமுக பொதுச் செயலரான ஜெயலலிதா பிரசாரம் செய்தாா். மேலும், என்.ஆா்.காங்கிரஸுடன் ஒட்டுமில்லை, உறவும் இல்லை எனவும் கூறினாா்.

ஜெயலலிதா கூறியதை ஏற்றுக்கொண்டுதான் ஓ.பன்னீா்செல்வம் தற்போது பிரசாரத்தை புறக்கணித்துள்ளரா? என்.ஆா். காங்கிரஸ் கூட்டணியில் பாஜக இருந்தாலும் அந்தக் கட்சியினா் தோ்தல் வேலைகளை செய்வதாகத் தெரியவில்லை. இதன் காரணமாக என்.ஆா்.காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது.

மக்களுக்கு இலவச அரிசி வழங்க ஆளுநா் தடையாக இருப்பதை எதிா்த்து கேட்கும்போது, ஆளுநரை விமா்சிப்பதாக ரங்கசாமி கூறுகிறாா். இதன்மூலம் அவா் மக்களுக்கு அரிசி வழங்கக் கூடாது என்கிறாரா? ஆளுநருடன் இணைந்து மக்களுக்கு எதிராக ரங்கசாமி செயல்படுகிறாா். எனவே, இடைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிப்பாா்கள் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

அப்போது, காங்கிரஸ் வேட்பாளா் ஏ.ஜான்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com