மாமல்லபுரத்தில் பார்வையாளா் கட்டண உயா்வைத் திரும்பப்பெற வேண்டும்: ஜி.கே. வாசன்

வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் பார்வையாளா் கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
மாமல்லபுரத்தில் பார்வையாளா் கட்டண உயா்வைத் திரும்பப்பெற வேண்டும்: ஜி.கே. வாசன்

வரலாற்று சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் பார்வையாளா் கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடம் மாமல்லபுரம். மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்குகிறது. மாமல்லபுரம் வழியாக செல்லும் பயணிகளும், சுற்றுலாவிற்காக வந்து மாமல்லபுரத்தை பார்ப்பவர்களும் பயன் பெற வேண்டும். இதன் மூலம் மாமல்லபுர மக்களும், வியாபாரிகளும், விற்பனை செய்பவர்களும் பொருளாதாரம் ஈட்டி வாழ்வாதாரத்தில் சிறக்க வேண்டும். இதற்கு மாமல்லபுரத்தை, சிற்பக்கலைகளை, புராதன சின்னங்களை தொடர்ந்து பாதுகாத்து, சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். மாமல்லபுர பகுதி மக்கள், சுற்றுலாவிற்காக வரும் பயணிகள் என அனைவரும் மாமல்லபுரத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். 

அதே சமயம் மாமல்லபுரத்தை பராமரிக்க, பாதுகாக்க, குறைந்த கட்டணத்தில் பொது மக்கள், சுற்லாப்பயணிகள் புராதன சின்னங்களை பார்வையிட மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தற்போது மாமல்லபுரமானது பாரதப் பிரதமர், சீன அதிபர் சந்திப்புக்கு பின்பு மேலும் பிரபலமாகி மாமல்லபுரத்தை நாடி வருகின்ற பார்வையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகமாகிறது. இங்குள்ள கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகியவற்றை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. எனவே மாமல்லபுரத்திற்கு புராதன சின்னங்களை பார்வையிடுவதற்கு வருகின்ற உள்ளூர் சுற்றுலாப்பயணிகளிடம் புதியதாக கட்டணம் ஏதும் அதிகமாக வசூலிக்கக்கூடாது.

இப்போது மாமல்லபுரத்தில் வெண்ணெய் உருண்டை பாறையை பார்வையிட உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் ரூபாய் 40 ம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் ரூபாய் 600 ம் வசூலிக்க மத்திய தொல்லியல் துறை முடிவு எடுத்து அமல்படுத்த தொடங்கியிருப்பதை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாமல்லபுரத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகள் பாறைகளில் செதுக்கப்பட்ட குகை கோயில்கள், சிற்பங்கள் என ஏராளமான கலை நயத்தோடு காட்சியளிக்கும் மாமல்லபுரத்தினை சுற்றிப்பார்த்து வியந்து செல்கின்றனர். 

இந்நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு நுழைவுக்கட்டணம் என்பது மாமல்லபுரத்தை பார்த்து பயன்பெறக்கூடிய வகையில் இருக்காது. தமிழரின் பெருமையை, வரலாற்றை, தொன்மையை மிகச்சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள மாமல்லபுரத்தை பார்வையிட குறைந்த பட்சம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் வசூல் செய்யாமல் இருப்பது சாலச்சிறந்தது. மாமல்லபுரத்திற்கு தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஏன் வெளிநாட்டில் இருந்தும் வருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் விதமாக பார்வையாளர் கட்டணத்தை உயர்த்தாமல் இருக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்து புராதன சின்னங்களை, சிற்பங்களை பாதுகாக்கும் மத்திய தொல்லியல் துறையானது சுற்றுலாப்பயணிகளின் வருகையை வரவேற்கும் விதமாக கட்டணத்தை உயர்த்தாமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதையே பின்பற்றி வரலாற்றின் பெருமைக்கு மேலும் பெருமை சேர்க்க, பண்டையக்கால புகழை மேலும் பரப்ப உதவிட வேண்டும் என்று த.மா.கா சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com