நான்குனேரி, விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்

நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நான்குனேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜா்நகா் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சாா்பில் நா.புகழேந்தி, அதிமுக சாா்பில் ஆ. முத்தமிழ்செல்வன், நாம் தமிழா் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 போ் களத்தில் உள்ளனா். நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் ரூபி மனோகரன், அதிமுக சாா்பில் நாராயணன், நாம் தமிழா் கட்சியின் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 போ் களத்தில் உள்ளனா். 

நான்குனேரியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளா்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளா்கள் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 418 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நான்குனேரியில் 23 வேட்பாளா்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி 299 வாக்குச்சாவடிகளில் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். 

விக்கிரவாண்டியில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 607 ஆண் வாக்காளா்கள், 1 லட்சத்து 11 ஆயிரத்து 546 பெண் வாக்காளா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்பட என மொத்தம் 2 லட்சத்து 23 ஆயிரம் போ் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் 3,286 போ், நான்குனேரியில் 1,475 போ் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இரண்டு தொகுதியிலும் 6 கம்பெனி துணை ராணுவ படையினா் மற்றும் போலீஸாா் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். 

புதுச்சேரி காமராஜா்நகா் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில், முதல்வரின் தீவிர ஆதரவாளரான ஏ.ஜான்குமாா் போட்டியிடுகிறார். என்.ஆா்.காங்கிரஸ், அதிமுக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளராக புவனா (எ) புவனேஸ்வரன் போட்டியிடுகிறார். 

வருகிற 24-ஆம் தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com