இடைத்தேர்தல் முடிவுகள்: விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளைக் கைப்பற்றியது அதிமுக

நான்குனேரி தொகுதியில் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி அமோக வெற்றி பெற்றார்.
ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

நான்குனேரி தொகுதியில் 32,312 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி அமோக வெற்றி பெற்றார்.

நான்குனேரி தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில்  அதிமுக வேட்பாளர் நாராயணன் 22 சுற்றுகள் முடிவில் 94,802 வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 61,991 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.

விக்கிரவாண்டியைக் கைப்பற்றியது அதிமுக
விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனே வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 1,13,428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் பலம் 124 ஆக அதிகரித்துள்ளது. இவ்விரு தொகுதிகளை இழந்ததால் திமுகவின் பலம் 100 ஆகக் குறைந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com