நாளை முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (அக். 25) முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்
மருத்துவர்கள் வேலைநிறுத்தம்


ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (அக். 25) முதல் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகக் கூடிய சூழல் உருவாக உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லுôரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயர்வும் வழங்க வேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. 
அதுதொடர்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பது அவர்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.
இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் அறிவித்தது.
மற்றொரு அமைப்பான அரசு மருத்துவர்கள் சங்கமும் வரும் 30, 31-ஆம் தேதிகளில் அத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவித்தது. இந்தச் சூழலில், வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அரசு மருத்துவர்கள் எவருக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கக் கூடாது என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்னறிவிப்பின்றி விடுமுறை எடுப்பவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினரின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், திட்டமிட்டபடி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் தர்னா: இதற்கிடையே, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  புதன்கிழமை, தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அப்போது, ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து, தமிழக அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது: ஊதிய உயர்வு கோரிக்கையை முன்னிறுத்தி வரும் 30, 31-ஆம் தேதிகளில், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் எங்களது அமைப்பினர் ஈடுபட உள்ளனர். 
நோயாளிகள் பாதிக்கப்படாமல் இருக்க அதற்கு முந்தைய நாளிலேயே காத்திருப்புப் பட்டியலில் உள்ள அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com