பட்டப் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு: தலைவர்கள் கண்டனம்

அனைத்து வகையான பட்டப்படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனைத்து வகையான பட்டப்படிப்புகளில் சேர நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டுவரும் மத்திய அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ (மதிமுக): புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட இருப்பதாகவும், அதில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் கலை, அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு கொண்டு வருவதற்கான பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏழை மற்றும் பட்டியலின மாணவர்கள் கலை, அறிவியல் படிப்புகளில் பட்டம் பெறுவதை இது தடுத்துவிடும். மாநிலங்களின் அதிகாரங்களைப் பறித்து, அனைத்தையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் இந்த முயற்சி எதிர்விளைவுகளை உருவாக்கும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பட்டப் படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்வதன் மூலம், பெரும் பகுதி மக்களின் கல்வி உரிமையினை பறித்து விட மத்திய அரசு முயற்சிக்கிறது. ஏற்கெனவே 5 ஆம் வகுப்பு, 8  ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 என பல கட்டங்களில் பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் அடித்தட்டு, உழைக்கும் மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது.  கல்வியின் தரத்தையும், திறனையும் உயர்த்திட நீட் போன்ற தேர்வுகள் பயனளிக்கவில்லை என்பதை அனுபவம் உணர்த்தியுள்ளது.
நுழைவுத் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி பயிற்சி மையங்கள் புற்றீசல்களாகப் பெருகி, கட்டணம் என்ற பெயரில் லட்சக்கணக்கான ரூபாயை பறித்து வருகின்றன. எனவே, மத்திய அரசின் முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. நீட் உள்பட அனைத்து வகையான நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com