பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள்: எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள் செயல்படுவது, கண்காணிப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.  உடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  செயலர் தீரஜ் குமார், விளையாட்டு மேம்பாட்டு  ஆணைய உறுப்பினர் செயலர்
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.  உடன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை  செயலர் தீரஜ் குமார், விளையாட்டு மேம்பாட்டு  ஆணைய உறுப்பினர் செயலர்


பள்ளிகளில் ஹிந்து அமைப்புகள் செயல்படுவது, கண்காணிப்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் எந்தவித சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை அனுப்பியதாக வெளியான சுற்றறிக்கையில், பள்ளி மற்றும் கல்லூரி அளவில் ஹிந்து இளைஞர் முன்னணி மற்றும் ஹிந்து மாணவர் முன்னணி ஆகிய அமைப்புகள் மாணவர்களை மதரீதியாக திரட்ட  முயல்வதாகவும் ஒழுக்கக் கல்வி, பக்தி, புராணம், இதிகாசம் போன்றவற்றை போதிப்பது போன்ற மாணவர்களை சித்தாந்த ரீதியாகத் திரட்டி வருவதும் அரசின் கவனத்துக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதேபோன்று கல்லூரிகளில் 10 பேர் கொண்ட குழுக்களாக ஹிந்து மாணவர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் பணியில் ஹிந்து இளைஞர் முன்னணி ஈடுபட்டிருப்பதாகவும், அந்தக் குழு லவ் ஜிகாத் போன்ற மாற்று மதத்தினர் ஹிந்து பெண்களை  காதலிப்பதைத் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடவிருப்பதாகவும் புகார் வந்துள்ளது. மதம், சித்தாந்தம் அடிப்படையில் மாணவர்கள் ஒன்று சேர்வதை கண்காணிக்குமாறும் மாணவர்களை மத ரீதியில் ஒருங்கிணைக்கும் முயற்சிகளைத் தடுக்க  வேண்டும் என்றும் உடனடியாக இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக அனுப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில், சென்னையிலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலக மாநாடு கூடத்தில், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், அரசு  வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு இருப்பது போல், தனியார் துறையிலும் விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் பேசிய  அமைச்சர், விளையாட்டுக் கழகங்கள் தவறான வழியில் செயல்படுவது தொடர்ந்தால் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு கலைக்கப்படும் என எச்சரித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்,  பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் மட்டுமே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள்,  தலைமை ஆசிரியர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்களின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும். அவற்றைத் தவிர மற்றவர்களின் சுற்றறிக்கைகள் பொருந்தாது.  மத ரீதியான மாணவர்களை ஒருங்கிணைக்கக் கூடாது என வெளியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படும் சுற்றறிக்கைகள் முதல்வரின் ஒப்புதலின்றி அனுப்பப்படாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com