தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் அவகாசம் கோரியது மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் நான்கு வார கால அவகாசம் அளிக்கக் கோரி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது. 
தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் அவகாசம் கோரியது மாநிலத் தேர்தல் ஆணையம்


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் நான்கு வார கால அவகாசம் அளிக்கக் கோரி, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளது. 
இந்த விவகாரம் தொடர்பாக வழக்குரைஞர் சி.ஆர். ஜெயசுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. 
அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் கால அவகாசம் கோரப்பட்டது. பின்னர், கடந்த ஜூலையில் 15-இல் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 
தேர்தலை நடத்துவதற்கு ஏற்படும் தாமதம் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளால் அல்ல. 
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நடத்தியதன் காரணமாக உருவான சூழல்தான் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கைக்கான முன்னேற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 
இருப்பினும், மேற்கண்ட காரணத்தால் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிக்கையை வெளியிடுவதற்கு மேலும் 60 நாள்கள் தாமதமாகும். 
எனவே, உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31 வரை அவகாசம் தேவை என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தேர்தலை அக்டோபர் இறுதிக்குள் நடத்துமாறு உச்சநீதிமன்றம் ஜூலை 17-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளது. 
அதில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி தேவையான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. 
இந்நிலையில், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப் பதிவு இயந்திரங்களை முதல் நிலை பரிசோதனை செய்ய வேண்டிய பாரத் மின்னியல் நிறுவனத்தின் (பெல்) தொழில்நுட்பக் குழுவினர் மகாராஷ்டிரம், ஹரியாணா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் தேர்தல் முடிந்த பிறகு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அக்டோபர் 28-இல் திரும்புவார்கள் என்று பெல் நிறுவனத்தின் உயரதிகாரி கடிதம் மூலம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளார். 
இதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த மேலும் நான்கு வார காலம் அவகாசம் அளிக்கவும், டிசம்பர் முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கையை வெளியிடவும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி வழங்கம் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com