மருதுபாண்டியர்களின் 218-ஆவது குருபூஜை: துணை முதல்வர், அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் 218 -ஆவது நினைவு நாள் மற்றும் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவு மணி மண்டபத்தில் வியாழக்கிழமை மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள மருதுபாண்டியர் நினைவு மணி மண்டபத்தில் வியாழக்கிழமை மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 


சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் 218 -ஆவது நினைவு நாள் மற்றும் குருபூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
  இதை முன்னிட்டு, காலை 7 மணியளவில் மருதுபாண்டியர் வாரிசுதாரர் குழுத் தலைவர் ராமசாமி தலைமையில் பொங்கல் வைத்து மருதுபாண்டியர் உருவச் சிலைகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
அதன் பிறகு, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சின்னமருதுபாண்டியர், பெரியமருதுபாண்டியர் உருவச் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். 
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே. ராஜூ, ஒ.எஸ்.மணியன், சி. விஜயபாஸ்கர்,  ஆர்.பி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ,  பாஸ்கரன் உள்ளிட்ட அமைச்சர்களும்,  சிவகங்கை மக்களவை முன்னாள் உறுப்பினர்  பி.ஆர்.செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா 
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 திமுக, மதிமுக, காங்கிரஸ்: திமுக சார்பில் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான கே.ஆர்.பெரியகருப்பன், தலைமையில் முன்னாள் அமைச்சர் தென்னவன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 
மதிமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளர் மல்லைசத்யா தலைமையில் மாவட்டச் செயலாளர்  செவந்தியப்பன் உள்ளிட்டோர்மாலை அணிவித்தனர். 
காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராம அருணகிரி, ராமசுப்புராம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 
 தேமுதிக சார்பில் பொதுக்குழு உறுப்பினர் உசாலி, பாஜகவின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  அஞ்சலி செலுத்தினர். 
 நினைவுத்தூணில்..: திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் அமைந்துள்ள  நினைவுத்  தூணுக்கு  அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com