ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணியில் தொடரும் சவால்கள் என்னென்ன?

திருச்சியில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் 22 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
சிறுவனை மீட்கும் பணி
சிறுவனை மீட்கும் பணி


திருச்சி: திருச்சியில் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணிகள் 22 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.

திருச்சி மணப்பாறை அருகே வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை வெள்ளிக்கிழமை மாலை அருகிலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். 

610 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் வின்சென் 80 அடி பள்ளத்தில் சிக்கிக் கொண்டான். தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த பல்வேறு மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க பல முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 22 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. ஆழ்துளைக் கிணற்றின் 70 அடிக்குக் கீழே குழந்தை சென்றுவிட்ட நிலையில், ஹைட்ராலிக் கருவியின் மூலம் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. அதாவது கை போன்ற கருவியை ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கி, அது குழந்தையின் கையைப் பற்றி மேலே கொண்டு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கருவி குழந்தையை சென்றடைவதைக் கண்காணிக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறிய மானிட்டரில் கண்காணிப்புப் பணி நடைபெறும்.

இந்த மீட்புப் பணியில் மிகப் பெரிய சவால்களாக இருப்பது, ஆழ்துளை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தின் அகலம் வெறும் 4 அங்குலம் மட்டுமே  இருப்பதுதான். இதன் காரணமாக, தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில முக்கிய மீட்புக் கருவிகள் குழிக்குள் செல்ல முடியவில்லை.

குழந்தையின் மீது மண் மூடி இருப்பதால் குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குழந்தை மீது விழுந்திருக்கும் மண் மிகவும் ஈரமாக இருப்பதால், அதனை செப்டிக் டேங்குகளை க்ளீன் செய்யும் கருவி மூலம் அகற்றுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com