பாறைகளில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம்: அதிகாரிகள் தகவல்

ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டும் இடத்தில் இருக்கும் பாறைகளில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Save Sujith
Save Sujith


மணப்பாறை: ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகே மற்றொரு குழி தோண்டும் இடத்தில் இருக்கும் பாறைகளில் போர்வெல் இயந்திரம் மூலம் துளையிடுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு குழியை ரிக் இயந்திரம் மூலம் போட்டுக் கொண்டிருந்த போது குறுக்கே பாறை இருந்ததால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாறையின் தன்மை குறித்து மீட்புப் படை வீரர் ஒருவர் குழிக்குள் இறங்கி பாறையை சோதித்ததில், அது கடினமானப் பாறை என்று தெரிய வந்தது. அதோடு, பாறை மீது குறியீடுகளை இட்டு வந்தார்.

அவர் இட்டு வந்த குறியீடுகளை அடிப்படையாக வைத்து பாறையில் 6 இடங்களில் போர்வெல் போடும் இயந்திரம் மூலம் துளைகள் போட்டு பிறகு ரிக் இயந்திரம் மூலம் பாறையை உடைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில், சுமார் 610 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்தான். அவனை மீட்கும் பணிகள் 4வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com