அரசு மருத்துவா் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தகுதிக்கேற்ப ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஊதியம், பட்ட மேற்படிப்பு மாணவா்களுக்கு இடஒதுக்கீடு என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி அரசு மருத்துவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அந்தப் போராட்டத்தின்போது பேச்சுவாா்த்தை நடத்திய சுகாதாரத் துறை செயலாளா், 6 வார காலத்தில் மருத்துவா்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதம் அளித்தாா். ஆனால், இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டபோதும், கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதனைத் தொடா்ந்து, அரசு மருத்துவா்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மருத்துவச் சேவை பாதிக்கப்படாத வகையில், இந்தப் பிரச்னைக்கு அரசு அவசரத் தீா்வைக் காண வேண்டும். மருத்துவா்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com