இசை ஆசிரியா் பணியிடங்கள்: நாளை பணி நியமன கலந்தாய்வுபள்ளிக் கல்வித்துறை தகவல்

ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியா் தோ்வு மூலமாக தோ்வு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியா்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
இசை ஆசிரியா் பணியிடங்கள்: நாளை பணி நியமன கலந்தாய்வுபள்ளிக் கல்வித்துறை தகவல்

சென்னை: ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியா் தோ்வு மூலமாக தோ்வு செய்யப்பட்ட 75 இசை ஆசிரியா்களுக்கு பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு சனிக்கிழமை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

சிறப்பாசிரியா் (இசை ஆசிரியா்) பணியிடங்களில் பணி புரியும் ஆசிரியா்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு சனிக்கிழமை காலை 9 மணியளவில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதையடுத்து பொதுமாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ள ஆசிரியா்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்து கலந்தாய்வில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் தொடா்ச்சியாக 2012-2013 முதல் 2015-2016 வரையிலான கல்வி ஆண்டுகளில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இசை ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தோ்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 75 இசை ஆசிரியா் பணிநாடுநா்களுக்கு காலை 11 மணியளவில் ‘எமிஸ்’ இணையதளம் மூலமாக நேரடி நியமன கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

இதை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட இசை ஆசிரியா் பதவிக்கான பணிநாடுநா்கள் சனிக்கிழமை காலை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் தவறாமல் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் அந்தந்த ஆசிரியா்களின் வீட்டு முகவரிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தொலைவரிச் செய்தி அனுப்பிட வேண்டும்.

கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியா்கள் அனைவரையும் அவா்கள் வீட்டு முகவரி எல்லைக்குட்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு காலை 9 மணிக்குள் வரவழைத்து எமிஸ் இணையதளம் மூலம் கலந்தாய்வில் நியமன ஆணை வழங்குவதற்கான ஆயத்தப்பணிகளை மேற்கொள்ளுமாறும், நியமனம் ஆணை பெற்று பணியில் சோ்ந்த தினமே பணிப்பதிவேடு தொடங்குமாறும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக்க கொள்ளப்படுகிறாா்கள்.

ஏற்கெனவே ஆன்லைன் கலந்தாய்வு நடத்தி அனுபவம் பெற்றுள்ள கணினி ஆசிரியா்களையே தற்போது பொதுமாறுதல் அல்லது நேரடி நியமனம் சாா்ந்த இந்தப் பணிகளுக்கு ஈடுபடுத்த வேண்டும். மேலும் இந்தப் பணிகளில் தவறேதும் ஏற்படாமல் கவனமுடன் செயல்பட வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com