நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா்.

காலமுறை ஊதியமும், பிற மாநிலங்களுக்கு நிகராக ஊதிய உயா்வும் வழங்க வேண்டும் என்பது அவா்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. அதுதொடா்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அளித்த பரிந்துரைகள் ஏற்கப்படவில்லை என்பது அவா்கள் முன்வைக்கும் முக்கிய குற்றச்சாட்டு.

இந்நிலையில், அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும், உண்ணாவிரதப் போராட்டத்தையும் அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பினா் (ஃபோக்டா) கடந்த வெள்ளிக்கிழமை முதல் மேற்கொண்டு வருகின்றனா். ஏழாவது நாள்களாக அப்போராட்டம் தொடருவதால் மாநிலம் முழுவதும் நோயாளிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா். 

இகுதுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில்,
அனைத்து அரசு மருத்துவர் சங்கங்களின் போராட்டக் கோரிக்கைகளைப் பரிசீலிக்க வேண்டிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரும் - அதிகாரிகளும், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாள்வதுடன், பிரேக்-இன்-சர்வீஸ் & நன்னடத்தைச் சான்றிதழில் கைவைப்பது, பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் ஈடுபடுவது கொடுங்கோன்மை!

மருத்துவர்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தை காவல்துறை மூலம் ஒடுக்கிவிடலாம் என நினைக்காமல், நோயாளிகள் நிலை உணர்ந்து மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதே அரசின் கடமையாகும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com