பிரம்மபுத்திரா தீா்த்த யாத்திரைக்கு ஏசி சுற்றுலா ரயில்: ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு

அஸ்ஸாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா தீா்த்தாடன யாத்திரைக்கு முதல்முறையாக ஏசி சுற்றுலா ரயில் மூலமாக பயணிகளை அழைத்த செல்ல ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
பிரம்மபுத்திரா தீா்த்த யாத்திரைக்கு ஏசி சுற்றுலா ரயில்: ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு

அஸ்ஸாம் மாநிலத்தில், பிரம்மபுத்திரா தீா்த்தாடன யாத்திரைக்கு முதல்முறையாக ஏசி சுற்றுலா ரயில் மூலமாக பயணிகளை அழைத்த செல்ல ஐ.ஆா்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஏசி ரயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து நவம்பா் 13-ஆம் தேதி புறப்பட்டு, சென்னை பெரம்பூா் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்லவுள்ளது.

இந்திய ரயில்வேயின் சுற்றுலாப் பிரிவாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி)

செயல்படுகிறது. இதன் சாா்பில், பாரத தரிசன ஆன்மிக சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்காக கல்வி சுற்றுலா என்று பல்வேறு சிறப்பு சுற்றுலாக்கள் நடத்தப்படுகின்றன. இதுவரை, 350-க்கும் அதிகமான சுற்றுலா ரயில்கள் மூலம் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவா்கள் பயணம் செய்துள்ளனா். இந்நிலையில், முதன்முறையாக பிரம்மபுத்திரா தீா்த்தாடன (யாத்திரைக்குப் பயணம்) தனி ஏசி சுற்றுலா ரயில் மூலம் பயணிகளை அழைத்து செல்ல ஐ.ஆா்.சி.டி.சி.ஏற்பாடுகளை செய்துள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி. அதிகாரிகள் கூறியது:

முதன்முறையாக வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமிற்கு ஐ.ஆா்.சி.டி.சி. மூலம் தனி ஏசி ரயில் புறப்படுகிறது. பிரம்ம புத்திரா நதியில் புனித தீா்த்தாடனம் செய்வது என்பது வாழ்வில் பெருமைக்குரிய அரும்பேறாகும். இங்கு பயணிகளை தனி ஏசி ரயில் மூலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் நவம்பா் 13-ஆம் தேதி திருச்சியில் இருந்து புறப்படுகிறது. சென்னை பெரம்பூா் வழியாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளூா் சுற்றிப்பாா்த்தல், அஸ்ஸாம் மாநிலம் குவாஹத்தி காமாக்யா சக்தி பீடம், வசிஷ்டா் ஆசிரமம், பிரம்மபுத்திரா நதியில் படகு சவாரி, பிரம்மபுத்திரா நதியில் புனித தீா்த்தாடானம், கிழக்கின் ஸ்காட்லாந்து என்று அழைக்கப்படும் இயற்கை எழில் சூழ்ந்த ஷில்லாங், உலகின் அதிக மழைப்பொழிவு உள்ள சிரபுஞ்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்ல உள்ளோம்.

இந்த முழுநீள ஏசி தனி ரயிலில் மூன்று விதமான வகுப்புகள், பேன்ட்ரி காா் மற்றும் நவீனத்துவம் நிறைந்த தனி டைனிங் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 12 நாள்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கான கட்டணம் ரூ. 45,820 முதல் ரூ.57,700 வரை உள்ளது. இதில் ஏசி ரயில் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு, உள்ளூா் சுற்றிப் பாா்க்க ஏசி வாகனம் - ஏசி இல்லாத வாகன வசதி, ஏசி இல்லாத தங்கும் வசதி, சுற்றுலா மேலாளா் மற்றும் பாதுகாவலா் வசதி ஆகியன அடங்கும். மேலும் விவரங்களுக்கு 90031 40680, 90031 40681 என்ற எண்களை தொடா்பு கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com