குரூப் 4 தேர்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு

புதிய பாடத் திட்டத்தின் கீழ் அதிகமாகப் படித்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தேர்வர்கள் கூறினர்.
குரூப் 4 தேர்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு

கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவுக்குள் 6 ஆயிரத்து 491 காலியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 301 தாலுகா மையங்களில் 5 ஆயிரத்து 575 இடங்களில் தேர்வுக்கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 

தேர்வு காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 1 மணி வரை நடந்தது. தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 52 ஆயிரத்து 70 ஆகும்.

பழைய பாடத் திட்டத்தில் இருந்து வினாக்கள் குரூப் 4 வினாத்தாளில் இருந்து கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பழைய பாடத் திட்டத்தில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. 

அதாவது சமச்சீர் கல்விக்கு முந்தைய பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. புதிய பாடத் திட்டத்தின் கீழ் அதிகமாகப் படித்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டதாக தேர்வர்கள் கூறினர்.
 
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் 5 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com