மேட்டூர் அணை நீர் மட்டம் 117.20 அடி

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.20 அடியாகச் குறைந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் திங்கள்கிழமை காலை 117.20 அடியாக இருந்தது.  அணைக்கு
திங்கள்கிழமை காலை கடல்போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.
திங்கள்கிழமை காலை கடல்போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.


மேட்டூர் அணையின் நீர் மட்டம் 117.20 அடியாகச் குறைந்தது. மேட்டூர் அணையின் நீர் மட்டம் திங்கள்கிழமை காலை 117.20 அடியாக இருந்தது.  அணைக்கு நொடிக்கு 11,302 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000  கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது.  அணையின் நீர் இருப்பு 89.07 டி.எம்.சி.யாக இருந்தது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமை காலை 117.43 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர் மட்டம் திங்கள்கிழமை காலை 117.20 அடியாகச் 
சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com