புதுவை பேரவைத் துணைத் தலைவராக பாலன் பதவியேற்பு

புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராக எம்.என்.ஆர்.பாலன் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராகப் பதவியேற்ற எம்.என்.ஆர்.பாலனுடன் முதல்வர் வே.நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள்.
புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராகப் பதவியேற்ற எம்.என்.ஆர்.பாலனுடன் முதல்வர் வே.நாராயணசாமி, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து மற்றும் அமைச்சர்கள்.


புதுவை சட்டப்பேரவைத் துணைத் தலைவராக எம்.என்.ஆர்.பாலன் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
புதுவை பேரவைத் தலைவராக இருந்த வெ.வைத்திலிங்கம் மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, துணைத் தலைவராக இருந்த வே.பொ.சிவக்கொழுந்து பேரவைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, காலியான துணைத் தலைவர் பதவிக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, புதன்கிழமை பிற்பகல் 12 மணி வரை மனுக்கள் பெறப்படும் என்று சட்டப்பேரவைச் செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்தார். அதன்படி, புதன்கிழமை காலை காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.என்.ஆர். பாலன் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்தார். அவருக்காக முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் மனுக்களை தாக்கல் செய்தனர்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை காலை கேள்வி நேரம் முடிந்தவுடன் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து, பேரவை துணைத் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்த விவரங்களை அறிவித்தார். அப்போது, எம்.என்.ஆர்.பாலனுக்கு 6 மனுக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் வந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஓர் உறுப்பினர் மட்டும் முன்மொழியப்பட்டிருப்பதால் அவர் போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் பாலனுக்கு வாழ்த்து தெரிவித்து, பேரவைத் தலைவர் இருக்கையில் அமர வைத்தனர். 
அப்போது, பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் வந்து வாழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். ஆனால், அப்போது அவையில் இருந்த அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் யாரும் வந்து வாழ்த்து தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com