ஒரே குடும்ப அட்டைத் திட்டம்  மக்களை எவ்விதத்திலும் பாதிக்காது: அமைச்சர் செல்லூர் ராஜூ

ஒரே குடும்ப அட்டைத் திட்டம் தமிழக மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை சாலை  மொத்த விற்பனை பண்டகசாலையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியை திறந்து வைத்து பொருள்கள் வழங்குகிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ.
திருச்சி சுப்ரமணியபுரம் ஏரிக்கரை சாலை  மொத்த விற்பனை பண்டகசாலையில் அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடியை திறந்து வைத்து பொருள்கள் வழங்குகிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ.

ஒரே குடும்ப அட்டைத் திட்டம் தமிழக மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறை சார்பில் திருச்சி மாவட்டப் பகுதிகளில் அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பு அங்காடிகள், பெட்ரோல் விற்பனை நிலையத் திறப்பு விழாவின்போது அவர் மேலும் கூறியது:

மாநிலம் முழுவதும் ஏற்கெனவே 103 சிறப்பங்காடிகள்  செயல்படுகின்றன. தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ரூ. 5.82 கோடியில் 582 சிறப்பங்காடிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 44 அம்மா சிறு கூட்டுறவுச் சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. சிறப்பங்காடிகளில், 300 வகையான பொருள்கள் 5 சதவீத தள்ளுபடி விலையில் நுகர்வோருக்கு விற்கப்படுகின்றன.
வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு சிறப்பு பொது விநியோகத் திட்டம் மூலம் தமிழக மக்களுக்கு நியாயவிலைக் கடைகளில் தரமான பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் நியாயவிலைக் கடைகளில் அரிசி தரமாக இல்லை, பொருள்கள் இல்லை என ஆதாரமற்ற முறையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். வேண்டுமானால், நியாய விலைக்கடைகளில் அவர் நேரில் சென்று ஆய்வு செய்யலாம்.

தரமற்ற நியாயவிலைப் பொருள்களை வழங்கியதும், அரிசிக் கடத்தல் அதிகமாக இருந்ததும் திமுக ஆட்சியில்தான். மத்திய அரசின் ஒரே குடும்ப அட்டைத் திட்டம் வரவேற்கப்படக்கூடியது. தமிழக மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது.
வெளிநாட்டு நிறுவனங்களிடையே ரூ. 5 ஆயிரம் கோடி அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதற்காகவே தமிழக முதல்வர் வெளிநாடு சென்றுள்ளார். முதல்வரின் இதுபோன்ற சிறப்பான நடவடிக்கைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வீணாகப் பேசி வருகின்றனர் என்றார் அவர். 
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கு. கோவிந்தராஜ் முன்னிலையில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி ஆகியோர் அம்மா சிறப்பு அங்காடிகள், அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பழைய குட்செட் சாலையில் புதிய பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com