வீராணம் ஏரி செப்.11-இல் திறப்பு?

வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு வருகிற 11-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரி செப்.11-இல் திறப்பு?


வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு வருகிற 11-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஆக.13-ஆம் தேதி பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து, கல்லணையை அடைந்த தண்ணீர் அங்கிருந்து ஆக. 17-இல் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு, ஆக.20-இல் கீழணையை வந்தடைந்தது. கீழணையில் இருந்து அன்று நள்ளிரவே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டது. இதனால், ஏரியின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால், சென்னைக்கு அனுப்பி வந்த நீரின் அளவும் படிப்படியாக உயர்த்தப்பட்டது.
கீழணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு: கீழணையின் உச்ச நீர்மட்டமான 9 அடியில், வெள்ளிக்கிழமை நீர்மட்டம் 8 அடியாக இருந்தது. அணையிலிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு ஆக.31-ஆம் தேதி வரை விநாடிக்கு 1,900 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இந்த தண்ணீர் அளவு படிப்படியாக 600 கன அடியாகக் குறைக்கப்பட்டது. வீராணம் ஏரியின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை 46.66 அடியை எட்டிய நிலையில், கீழணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 191 கன அடியாகக் குறைக்கப்பட்டது. ஏரியின் உச்ச நீர்மட்டம் 47.50 அடியாகும். ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் 1,260 மில்லியன் கன அடி அளவுக்கு தற்போது தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்கு விநாடிக்கு 47 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது. வெளிநாடு சென்றுள்ள தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தமிழகம் திரும்பியவுடன் வருகிற 11-ஆம் தேதி வடவாறு, வீராணம் ஏரியிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com