ரூ.424 கோடியில் சிறு மீன்பிடித் துறைமுகங்கள்

நாகை மாவட்டத்தில் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், நம்பியார்நகர், நாகூர் பட்டினச்சேரி, தரங்கம்பாடி ஆகிய 5 இடங்களில் ரூ.424 கோடி மதிப்பீட்டில் சிறுமீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வி

நாகை மாவட்டத்தில் ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், நம்பியார்நகர், நாகூர் பட்டினச்சேரி, தரங்கம்பாடி ஆகிய 5 இடங்களில் ரூ.424 கோடி மதிப்பீட்டில் சிறுமீன்பிடித் துறைமுகங்கள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை (செப். 9) நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 
நாகை மாவட்ட கடலோரப் பகுதியில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேதாரண்யம் பகுதியில் ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் ரூ.150 கோடியிலும், வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடியிலும் சிறு மீன்பிடித் துறைமுகங்கள் கட்டப்படவுள்ளன. இதேபோல், நாகப்பட்டினம் நம்பியார் நகரில் ரூ.34 கோடியே 30 லட்சத்திலும், நாகூர் பட்டினச்சேரியில் ரூ.20 கோடியிலும், தரங்கம்பாடியில் ரூ.120 கோடி மதிப்பீட்டிலும் சிறு மீன்பிடித் துறைமுகங்கள் அமையவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளப்பள்ளம் கிராமத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். முன்னதாக, ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் துறைமுகம் அமையவுள்ள இடத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்கின்றனர். இதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு நம்பியார் நகர், 4.45-க்கு பட்டினச்சேரி, 5.45-க்கு தரங்கம்பாடி சாத்தங்குடியில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com