உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப  தேர்வு வாரியம் அறிவிப்பாணை: ரத்து செய்யக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான


தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. 
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனு: நான் எம்.எஸ்சி., எம்.பில்., மற்றும் பி.எட்., முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். மேலும், உதவி பேராசிரியர் ஆவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளேன். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமிக்க ஆகஸ்ட் மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பாணை வெளியிட்டது.
அந்த அறிவிப்பாணையில், உதவி பேராசிரியர் பணித்தேர்வு முறை தொடர்பாக 2013இல் பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் ஆசிரியர் பணி அனுபவத்துக்கு 15 மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கு 9 மதிப்பெண்கள், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதில், மொத்தமுள்ள 34 மதிப்பெண்களில் நேர்முகத்தேர்வுக்கு மட்டும் 29 சதவீத மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பணி நியமனமுறைகளில் மொத்த மதிப்பெண்ணில் நேர்முகத் தேர்வுக்கு 15 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. எனவே, நேர்முகத் தேர்வுக்கு 29 சதவீத மதிப்பெண் வழங்குவது சட்டவிரோதம் ஆகும்.
 உதவி பேராசிரியர் தேர்வு முறை தொடர்பாக உயர்கல்வித் துறை 2013இல் பிறப்பித்த அரசாணை மற்றும் அதனடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யவேண்டும். மேலும், பல்கலைக்கழக மானியக்குழு 2018இல் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு,  நீதிபதி வி.எம்.வேலுமணி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வழக்கு விசாரணையை செப். 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com