இந்திரா சிவசைலம் அறக்கொடை விருதுக்கு இசைக் கலைஞர் பந்துலா ரமா தேர்வு

இந்திரா சிவசைலம் எண்டோன்மென்ட் (அறக்கொடை) விருதுக்கு கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர் பந்துலா ரமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இந்திரா சிவசைலம் அறக்கொடை விருதுக்கு இசைக் கலைஞர் பந்துலா ரமா தேர்வு


இந்திரா சிவசைலம் எண்டோன்மென்ட் (அறக்கொடை) விருதுக்கு கர்நாடக இசைக்கலைஞர் டாக்டர் பந்துலா ரமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
கர்நாடக இசை பாரம்பரிய கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக தி இந்திரா சிவசைலம் எண்டோமென்ட் (அறக்கொடை) நிதியம் சார்பில் இந்திரா சிவசைலம் அறக்கொடை பதக்கம் வழங்கப்படுகிறது. இதன்படி 2019-ஆம் ஆண்டுக்கான பதக்கத்தை கர்நாடக சங்கீத முன்னணி கலைஞரான டாக்டர் பந்துலா ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
இசைக் கலைஞர்கள் மற்றும் இசை வல்லுநர்கள் குடும்ப பாரம்பரியத்தில் இருந்து வந்திருக்கும் இவர், கர்நாடக சங்கீதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னை மியூசிக் அகாதெமியில் வருகிற அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணி அளவில் நடைபெறும் விழாவில், இவருக்கு விருது வழங்கப்படுகிறது. 
மேலும் வயலின் வித்வான் ஆர்.கே ஸ்ரீ ராம்குமார், மிருதங்க வித்வான் வைத்தியநாதன் மற்றும் விதூஷி பாக்கியலட்சுமி எம்.கிருஷ்ணா ஆகியோருக்கு சிறந்த பக்க வாத்திய செயல்திறனுக்காக இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com